அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு-

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், அமெரிக்காவில் டிரம்ப்-பார்லிமென்ட் உறுப்பினர்கள் இடையேயான பனிப்போர் தொடர்வதால் அரசுத்துறைகள் முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் சபாநாயகரின் வெளிநாட்டு பயணம், டாவோஸ் பொருளாதார மாநாட்டிற்கு செல்ல இருந்த குழு பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது அதிபர் டிரம்பின் கனவு திட்டம். இதற்கு பட்ஜெட்டில் 5.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.39 ஆயிரத்து 693 கோடி) நிதி ஒதுக்கும்படி பாராளுமன்றத்திடம் டிரம்ப் கேட்டார். ஆனால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஏற்கவில்லை. மற்ற நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதியளித்தனர். ஆனால் அதை டிரம்ப் ஏற்க மறுத்து திருப்பியனுப்பினார். நிதி ஒதுக்கீடு இல்லாததால் டிச. 22 முதல் அத்தியாவசிய துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் முடங்கி கிடக்கின்றன. 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.முடக்கத்திற்கு தீர்வுகாண வெள்ளை மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார் டிரம்ப்.இந்நிலையில், டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சின் தலைமையில், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 5 பேர் பங்கேற்க இருந்தனர். கடைசி நேரத்தில் இந்த பயணத்திற்கான அனுமதியை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர்களின் உதவி தேவைப் படுவதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுயுள்ளது.சபாநாயகருக்கும் அனுமதியில்லைஅதேபோன்று பிரஸ்ஸல்ஸ், எகிப்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான குழு மேற்கொள்ளவிருந்த பயணத்திற்கும் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது குறித்து டிரம்ப் டுவிட்டரில், நாட்டின் முடக்கம் முடிவுக்கு வராத நிலையில் பயணங்கள் பலனிக்கப் போவதில்லை.இங்கு பேச்சுவார்த்தைக்கு நான்சி போன்றோர் தேவைப்படுகின்றனர். எனவே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும், என குறிப்பிட்டுள்ளார்.பிரஸ்ஸல்சில் இந்த குழு நேட்டோ பிரதிநிதிகள், ஆப்கன், எகிப்து, சிரியா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவிருந்தது.

மூலக்கதை