ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான புதிய உத்தி!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான புதிய உத்தி!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான புதிய உத்தி குறித்துக் கலந்துபேச, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
 
தம் மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தில் அவர் மேலும் தீவிரமாகச் செயல்படுகிறார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுகளில் கவனம் செலுத்த, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், உலகப் பொருளியல் கருத்தரங்கில் திருமதி மே கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த மற்றொரு திட்டத்துக்கு, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்னும் சுமார் 10 நாள்களில் வாக்களிக்கும்.

மூலக்கதை