துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கி 13 வயது கேரள சிறுவன் சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கி 13 வயது கேரள சிறுவன் சாதனை!

துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கி கேரளவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை படைத்து உள்ளான். 

துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆதித்யன் ராஜேஷ். இவன் தனது 9 வயதிலேயே, தனது பொழுதுபோக்குக்காக மொபைல் ஆப் தொடங்கினான். 

தற்போது ‘டிரைநெட் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் துபாயில் சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளான். 
இதுகுறித்து துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு ஆதித்யன் ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் கேரளாவின் திருவிழா நகரில் பிறந்தேன். எனக்கு 5 வயது இருக்கும்போது, எனது குடும்பம் துபாய் வந்துவிட்டது. எனக்கு முதன் முதலில் டைப்பிங் பழகுவதற்காக, பிபிசி டைப்பிங் வெப்சைட்டைத்தான் எனது தந்தை காட்டினார். எனது பொழுபோக்கிற்காக முதலில் ஒரு ஆப் உருவாக்கினேன்.

தற்போது ‘டிரைநட் சொல்யூசன்ஸ்’ என்ற சாப்ட்வேர் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளனே். என்னுடன் படிக்கும் 2 நண்பர்களே இதில் ஊழியர்களாக உள்ளனர். பல நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்து வருகிறோம். 

துபாயில் தொழில் தொடங்க 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனாலும் நாங்கள் ஒரு நிறுவனம் போலவே இலவசமாக சேவையாற்றி வருகிறோம். 12 நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான வெப் டிசைன் மற்றும் சேவைகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். 

இவ்வாறு ஆதித்யன் ராஜேஷ் கூறினார்.

மூலக்கதை