மாலத்தீவின் முன்னாள் அதிபரின் ரூ.46 கோடி முடக்கம்

தினகரன்  தினகரன்
மாலத்தீவின் முன்னாள் அதிபரின் ரூ.46 கோடி முடக்கம்

கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் ரூ.46 கோடி வங்கி கணக்கு பணம் முடக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தேர்தல் நிதியாக தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நேற்று அப்துல்லா யாமீனின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.46 கோடி இருப்பு உள்ளது.பதவிக்காலத்தில் யாமீன் தனக்கு எதிரானவர்களை சிறையில் அடைப்பதும், நாடு கடத்துவதாக கடும் நடவடிக்கைகள் எடுத்தவர். சீனாவுடன் நெருக்கம் காட்டி, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு குடைச்சல் கொடுத்தவர். தற்போது அதிபராக உள்ள இப்ராகிம் முகமது சாலேஹ், இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவர் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று அதிபர் சாலேஹ், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

மூலக்கதை