ரஷ்யாவில் 56 கொலை : குற்றவாளிக்கு ஆயுள்

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் 56 கொலை : குற்றவாளிக்கு ஆயுள்

மாஸ்கோ: ரஷ்யாவில் 56 பேரை கொலை செய்த கொடூரன் மிக்ஹெய்ல் பப்கோவ்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் மிக்ஹெய்ல் பாப்கோவ். இவர் 1992 முதல் 2007 வரை 56 பெண்களை கொலை செய்துள்ளார். இரவு நேரத்தில் தனது கார் பயணத்தின் போது, சுத்தியல் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொலைகளை நடத்தியுள்ளார். கொலை செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள். இதில் 10 பெண்களை பாலியல் செய்து கொலை செய்துள்ளார்.2012ல் நடந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் டி.என்.ஏ., வும் இவரது டி.என்.ஏ., வும் பொருந்தியதை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் 2015ல் 22 கொலைகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மற்ற பெண்களை கொலை செய்த வழக்கில் இவருக்கு நேற்று இரண்டாவது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மூலக்கதை