'கட்டுடல்' கங்காரு 'குட்-பை'

தினமலர்  தினமலர்
கட்டுடல் கங்காரு குட்பை

சிட்னி: 'ஹாலிவுட்' நடிகர் அர்னால்டு போல கட்டுடல் அமைப்பால் வியக்க வைத்த 'ரோஜர்' கங்காரு உயிரிழந்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் சரணாலயத்தில் ரோஜர் என்ற பெயரிலான கங்காரு மிகவும் பிரபலம். 'சிக்ஸ் பேக்ஸ்' வைத்தது போல இயற்கையிலேயே விரிந்த மார்பு, 6.7 அடி உயரம், 89 கி.கி., எடை என பார்ப்பதற்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும். இரும்பு வாளியை அனாயசமாக நெளித்து விடும். 'கிக் பாக்சிங்', மல்யுத்த சாகசம் நிகழ்த்தும். இதற்கு இணையதளத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு. மூப்பின் காரணமாக, 12 வயதில் உலகிற்கு 'குட்-பை' சொன்னது.இதனை பராமரித்த கிறிஸ் பர்ன்ஸ் கூறுகையில், ''2006ல் நெடுஞ்சாலையில் கார் மோதியதில் தாயை இழந்து தனியாக கிடந்தது ரோஜர். இதனை வளர்க்க, 188 ஏக்கரில் சரணாலயம் அமைத்தேன். உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசிக்கும் கங்காருவாக மாறியது. வலிமையான 'பையனை' இழந்து விட்டேன். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 13 லட்சம் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்,''என்றார்.

மூலக்கதை