கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு நாளை முதல் முழுமையான இணைய வசதி

தினகரன்  தினகரன்
கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு நாளை முதல் முழுமையான இணைய வசதி

கியூபா: கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு முழுமையான இணைய வசதி நாளை முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை முழுமையாக கிடைக்காத நாடுகளின் பட்டியலில் கியூபா உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா-கியூபா அதிபர் ராவுல் கேஸ்ட்ரோவுடன் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து இணைய சேவை வசதி விரைவாக கிடைத்தது. இருப்பினும், அரசு மின்னஞ்சல் பயன்பாட்டுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக வந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. இதைத் தொடர்ந்து வைஃபை வசதிகள் ஆங்காங்கே பொது இடங்களில் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், நாளை முதல் கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு 3ஜி இணைய சேவை முழுமையாகக் கிடைக்கும் என அந்நாட்டு அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். தணிக்கையற்ற இணைய சேவையாக இருந்தாலும், அமெரிக்க நிதியுதவி பெறும் சில இணையதளங்களும், கியூபாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இணையதளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை