தென்கொரியாவில் உறைந்த ஆற்றில் நடைபெற்ற மீன்பிடிக்கும் போட்டி: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினகரன்  தினகரன்

பியங்சங்: குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பனி உறைந்த ஆற்றில் நடைபெற்ற மீன்பிடிக்கும் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தென்கொரியாவின் பியங்சங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மறுநாள் நிறைவடையும் இந்த தொடரில் பனிஉறைந்த ஆற்றில் நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் வயது வித்யாசம் பாராமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகை மீன்களை தேடி பிடித்து வெற்றி களிப்பில் மிதந்தனர். அதிக மீன்களை பிடித்த சுற்றுலாப்பயணிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிறகு அந்த மீன்கள் அருகில் உள்ள உணவகங்களில் நெருப்பில் சுட்டு, தேவையான மசாலா கலவைகளை சேர்த்து சமைத்து சுடசுட பரிமாறப்பட்டன. குளிர்கால ஒலிம்பிக் தொடரின் வண்ணமயமான நிறைவு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில் தென்கொரிய அதிபர் மூன் சோ யிங் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.   

மூலக்கதை