கோழி முட்டையிடும் அதிசய சிறுவன்

தினமலர்  தினமலர்
கோழி முட்டையிடும் அதிசய சிறுவன்

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் சிறுவன் இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ளார். இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல், 14. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருகிறாராம்.அவரது தந்தை கூறுகையில், இந்த பிரச்னைக்காக நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். மருத்துவமனைக்கு வந்த பின் கூட இரண்டு முட்டைகள் போட்டுள்ளார். முட்டையை உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றார்.

ஆனால் மருத்துவர்களோ மனிதன் முட்டை போடுவதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதை யாரும் நேரடியாக பார்க்கவில்லை. மாணவனை முழுமையாக பரிசோதித்தபின்னரே உறுதிப்படுத்த முடியும் என்றனர்.

மூலக்கதை