அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவின், 27 மாகாணங்களில், 350 இடங்களில் நடந்த, 'யோகாத்தான்' எனப்படும், சூரிய நமஸ்கார யோகா பயிற்சியில், 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் துணை அமைப்பான, ஹிந்து சுயம்சேவக் சங்கா என்ற, எச்.எஸ்.எஸ்., வெளிநாடுகளில் உள்ள ஹிந்துக்களை ஒருங்கிணைத்து வருகிறது.இந்த அமைப்பின் சார்பில், 2007ல் இருந்து, அமெரிக்காவில் யோகாத்தான் எனப்படும், பல இடங்களில், ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விளக்க, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, அமெரிக்காவின், 27 மாகாணங்களில், 350 இடங்களில், நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், எம்.பி.,க்கள், மேயர்கள், கவர்னர்கள் என, 58 பிரபலங்களும் பங்கேற்றனர்.மொத்தம், 11 ஆயிரத்து, 254 பேர், சூரிய நமஸ்காரம் செய்தனர். இதைத் தவிர, சூரிய நமஸ்காரம் தொடர்பான பயிற்சி வகுப்புகளும், 155 இடங்களில் நடத்தப்பட்டன.

மூலக்கதை