மாலத்தீவில் அவசரநிலை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்

மாலே: மாலத்தீவில் அவசரநிலை அறிவிப்பு, 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மாலத்தீவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர் அப்துல்லா யமீன், கடந்த 5ம் தேதி அவசரநிலையை பிரகடனம் செய்தார். இது 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், ேநற்று மீண்டும் 30 நாட்களுக்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்திய பெருங்கடல் பகுதியில் மாலத்தீவுக்கு ஆதரவாக சீனா 5 போர்க்கப்பல்களை அனுப்பியதாக வெளியான செய்தியை, மத்திய அரசு மறுத்துள்ளது.

மூலக்கதை