மர்மமான முறையில் விடாமல் துரத்திய பீட்சா! அதிர்ச்சியில் வழக்கறிஞர்

PARIS TAMIL  PARIS TAMIL
மர்மமான முறையில் விடாமல் துரத்திய பீட்சா! அதிர்ச்சியில் வழக்கறிஞர்

ஜேர்மனியில் யாரோ மர்மமான முறையில் தனக்கு பீட்சா அனுப்புவதாக வழக்கறிஞர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
 
ஜேர்மனியில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் குய்டோ க்ரோல் என்பவர் தான் இப்படி ஒரு புகாரை அளித்துள்ளார்.
 
இவர் அளித்துள்ள புகாரில், கடந்த இரண்டரை வாரங்களாக இரவு, பகல் பாராமல் எனக்கு யாரோ பீட்சாக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 
நீங்கள் ஆர்டர் செய்த பீட்சா வந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து மெயில்களும், குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.
 
இதுவரை 100-க்கும் மேற்பட்ட பீட்சாக்கள் என்னை வந்தடைந்துள்ளது, இவற்றில் ஒன்றை கூட நான் ஆர்டர் செய்யவில்லை. நான் வாதாடி ஜெயிக்காத என் கட்சிக்காரர்கள் யாரவது கோபத்தில் இவ்வாறு செய்கிறார்களா அல்லது வேண்டப்படாதவர்கள் யாராவதா என குழப்பமாக உள்ளது.
 
குறிப்பாக, ஒருநாள் காலையில் 27 நிமிடங்களுக்குள் 15 பீட்சாக்கள் வந்தடைந்தன, கணினியில் ஏதும் கோளாறு ஏற்பட்டு இவ்வாறு தவறு நடக்கிறதா என அதையும் சோதித்து பார்த்துவிட்டேன்.
 
ஆகவே, விரைந்து விசாரணை மேற்கொண்டு அந்த மர்ம நபரை கைது செய்யும்படி குய்டோ க்ரோல் கோரியுள்ளார்.
 
மேலும், ஜேர்மனியின் சட்டவிதிப்படி யார் என்று தெரியாமல் உணவையோ, பொருட்களையோ அவர்கள் விருப்பமின்றி அனுப்பி வைப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை