பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்

தினமலர்  தினமலர்
பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்

சார்ஜா: பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பார்வையற்றோருக்கான உலக கோப்பை (40 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடந்தது. சார்ஜாவில் நடந்த பைனலில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த பாகிஸ்தான் அணி, 40 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, 38.2 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், கடந்த 2014ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த தொடரின் பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.

மூலக்கதை