அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்காவில், 'எச் - 1பி' விசாவுடன் வேலை பார்ப்போரின், கணவர் அல்லது மனைவிக்கு, வேலை பார்க்க அளிக்கப்படும் அனுமதி தொடர வேண்டும் என, அமெரிக்காவைச் சேர்ந்த, தொழில்நுட்ப நிறுவனங்களின் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

அனுமதி :

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, 'எச் - 1பி' விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெறுவோரில், இந்தியர்களே அதிகமாக உள்ளனர். குறிப்பாக, கம்ப்யூட்டர் சாப்ட்வேட் துறையைச் சேர்ந்தவர்கள், இந்த விசாவை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

'எச் - 1பி' விசா பெற்று, அமெரிக்காவில் வேலை பார்ப்பவரின் மனைவிக்கு, 'எச் - 4' விசா வழங்கப்படுகிறது. இந்த விசா உள்ளவர்களும், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விதியை மாற்றியமைக்க, அதிபர், டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே, 'எச் - 1பி' விசா முறையில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால், இந்தியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், 'எச் - 4' விசா உள்ளவர்கள் வேலை பார்ப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, அமெரிக்காவில் உள்ள, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறை நிறுவனங்களின் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

கடிதம் :

'எச் - 4' விசா உள்ளவர்கள் வேலை பார்ப்பதற்கு உள்ள அனுமதியை நிறுத்தக் கூடாது என, அவை வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக, அமெரிக்க குடியேற்றுமை துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மூலக்கதை