லஷ்கர் அமைப்புக்கு முஷாரப் சர்டிபிகேட்

தினமலர்  தினமலர்
லஷ்கர் அமைப்புக்கு முஷாரப் சர்டிபிகேட்

கராச்சி: பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா போன்றவை தேசப்பற்று மிக்கவை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.

மக்கள் ஆதரவாம்

தற்போது துபாயில் அடைக்கலமாகியுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜமாத் உத் தாவா, லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தேசப்பற்று மிக்கவர்கள். அவர்கள் பாகிஸ்தானுக்காகவும், காஷ்மீருக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். இந்த அமைப்புகளுக்கு ஏராளமான மக்கள் மற்றும் நல்லவர்களின் ஆதரவு உள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அரசியல் கட்சி துவக்கினால், யாரும் ஆட்சேபனை செய்ய மாட்டார்கள். இரண்டு அமைப்புகளும் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனது கட்சியுடன் கூட்டணி வைக்க அவர்கள் விரும்பினால் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தடை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஷாரப், தான் லஷ்கர், ஜமாத் உத் தாவா அமைப்பின் மிகப்பெரிய ஆதரவாளர் எனக்கூறியிருந்தார். கடந்த 2008 ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து லஷ்கர் அமைப்பை ஐ.நா., தடை செய்தது. ஜமாத் உத் தாவா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மூலக்கதை