எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு

வாஷிங்டன்: எச்1பி விசா பெற்றவர்களின் கணவன் அல்லது மனைவி, அமெரிக்காவில் வேலை செய்வதை தடுக்க, டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

வழக்கு

கடந்த 2015 முதல் எச்1பி பெற்றவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற ஒபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

இந்நிலையில் அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தி: எச்1பி விசா பெற்றவர்களின் கணவன் அல்லது மனைவி வேலை செய்ய அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற அமெரிக்க உள்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அதிபர் டிரம்ப் கொள்கைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மாற்றும்போது, எச்1பி விசா பெற்றவர்கள், தங்களது கணவன் அல்லது மனைவி வேலையில்லாத நிலை ஏற்படும். அவர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவார்கள். இதனால் திறமையானவர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். எச்1 பி விசாவில் இன்னும் விதிகளை மாற்றவும் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை