டெத் ஸ்குவாடிற்கு பலியான வடகொரிய ராணுவ ஜெனரல்

தினமலர்  தினமலர்
டெத் ஸ்குவாடிற்கு பலியான வடகொரிய ராணுவ ஜெனரல்

பையோங்: வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னின் வலதுகரமாக இருந்த ராணுவ ஜெனரல் மீது ஊழல் புகார் எழுந்ததன் காரணமாக அவர் கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வடகெரியாவின் ராணுவ பிரிவில் துணை ஜெனரலாகவும், அதிபர் கிம் ஜோங்கின் வலதுகரமாகவும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த ஹவாங் பையோங்க் சூ, என்பவர் கடந்த அக்டோபர் 13-ம் தேதி முதல் பொது நிகழச்சியில் பங்கேற்காமல் மாயமானார்.

‛டெத் ஸ்குவாட்' எனப்படும் மரண தண்டனை நிறைவேற்றும் படைபிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் வடகொரிய அரசு செய்தி நிறுவனம் இதனை உறுதி படுத்தியது. ஹவாங்க் பையோங்சூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிம்ஜோங் உத்தரவுபடி 'டெத் ஸ்குவாட்' பிரிவால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.

மூலக்கதை