அமெரிக்க ராணுவ பட்ஜெட் ரூ.44 லட்சம் கோடிக்–்கு ஒப்புதல்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.44 லட்சம் கோடியை அதிபர் டிரம்ப் ஒதுக்கீடு செய்துள்ளார். அமெரிக்க ராணுவ செலவுக்கு ரூ.44 லட்சம் கோடி (626 பில்லியன் டாலர்) மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க படைகளுக்கு கூடுதலாக 66 பில்லியன் டாலர் வழங்கப்படுகிறது. போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தயாரிப்புக்கு 26.2 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 90 போர் விமானங்களை வாங்க 10.1 பில்லியன் டாலர், தரைப்படைக்கு கவச வாகனங்கள் வாங்க 2.2 பில்லியன் டாலரும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மூலக்கதை