நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: வடகொரியாவுடன் நிபந்தனையின்றி பேச தயார் என அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழ்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியது.
இந்நிலையில், அணு ஆயுத பரிசோதனையை கைவிடுவது பற்றி முன் நிபந்தனை எதுவுமின்றி வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு துறை
அமைச்சர் டில்லர்சன் கூறியுள்ளார்.

மூலக்கதை