ஹபீஸ் சையத்தின் அமைப்பு தொண்டு நிறுவனமாம்: முஷாரப்

தினமலர்  தினமலர்
ஹபீஸ் சையத்தின் அமைப்பு தொண்டு நிறுவனமாம்: முஷாரப்

லாகூர்: லஷ்கரே தொய்பா அமைப்பை ஏன் பயங்கரவாத அமைப்பு என கூறுகிறீர்கள். அது சிறந்த ஒரு என்.ஜி.ஓ.என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் கூறினார்.

இந்தியாவில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாக்.பயங்கரவாதி ஹபீஸ் சையத்தின் ஆதரவாளராக முஷாரப் உள்ளார்.ஹபீஸ் சையத் ஜமேத்உத்தாவா, லஷ்கரே தொய்பா ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவனாக உள்ளார். இந்த இரு பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவாளன் என முஷாரப் பகிரங்கமாக பேட்டியளித்தார்.

இது குறித்து முஷாரப் கூறியது, லஷ்கரே தொய்பா, ஜமேத் உத் தாவா ஆகிய அமைப்புகளை ஏன் பயங்கரவாத அமைப்புகள் என அழைக்கிறீர்கள் இந்தியா தான் அவ்வாறு அழைக்கிறது. லஷ்கரே தொய்பா அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல. இரண்டும் வேறு வேறு தான். அந்தஅமைப்புகள் சிறந்த என்.ஜி.ஓ.அமைப்பு. பாக்.கில்ஒரு முறை பயங்கர பூகம்பம் ஏற்பட்ட போதும், காஷ்மீரில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் இந்த அமைப்புகள் பேருதவி செய்தன என்றார்.

மூலக்கதை