உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ்: சிந்து வெற்றி துவக்கம்

தினமலர்  தினமலர்
உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ்: சிந்து வெற்றி துவக்கம்

துபாய்: உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடரை இந்திய வீராங்கனை சிந்து வெற்றியுடன் துவக்கினார்.
துபாயில் உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் நடக்கிறது. இதில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் சிந்து மட்டும் விளையாடுகிறார். 'ஏ' பிரிவு முதல் லீக் போட்டியில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியோவை எதிர் கொண்டார். போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மூலக்கதை