ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

தெக்ரான்: ஈரானின், கெர்மான் பகுதியில் இருந்து 64 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 3. 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6. 2 ஆக பதிவாயிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர், பொருள்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஈரானின் கெஜ்தாக், ராவார் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

 

.

மூலக்கதை