பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய பிரான்ஸ் உச்சி மாநாட்டில் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

பாரிஸ்: பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுப்பார் என பல்வேறு நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. பிரான்ஸில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினர். இதில் பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, உயிரினங்கள் வாழும் பூமியும், அதன் வளர்ச்சியும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார். பூமியா அல்லது வளர்ச்சியா என்பதல்ல பிரச்சனை. இரண்டுமே தேவை தான் என்றார். தொழில்நுட்பம் மூலம் நாம் பூமியை காத்து வருகிறோம் என்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பேசுகையில் பருவநிலை மோசமடைந்து வரும் போரில் வெற்றியடைந்து வருவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக கூறினார். மின் உற்பத்தியில் மாசு குறைப்பு, கப்பல் போக்குவரத்தில் நச்சுக் காற்றுக்கு தடை போன்ற அம்சங்களை பல்வேறு நாட்டு தலைவர்கள் குறிப்பிட்டனர். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியதை பலரும் சுட்டிகாட்டி பேசினர். எனவே பருவநிலை ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

மூலக்கதை