உயிரை பறித்த சாகசம்: நெஞ்சை பதற வைத்த வீடியோ

தினமலர்  தினமலர்
உயிரை பறித்த சாகசம்: நெஞ்சை பதற வைத்த வீடியோ

பீய்ஜிங்: சீனாவின் இளம் சாகச வீரர் 62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்த போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனாவின் மத்திய மாகாணமான சாங்ஷா பகுதியைச் சேர்ந்தவர் வூ யாங்னிங்க்,26, இவர் பல அடி உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், ஸ்கைஸ்கிராப்பர் பில்டிங்கள் மீது எந்த தற்காப்பு உபகரணம் இன்றி ஏறி செல்பி எடுத்து சாகசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக பெட்டிங் வைத்து தனது உயிரை பணயம் வைத்துள்ள பல சாகசங்கள் செய்துள்ளார். .

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி 20 ஆயிரம் அமெரிக்க டாலர் பெட்டிங்கிற்காக சீனாவின் ஹூனானான் மாகாணத்தில் 62 அடி உயர ஸ்கைஸ்கிராப்பர் கட்டிடத்தின் மீது ஏறி சாகசம் செய்தார். அப்போது கட்டிடத்தின் விளம்பில் சுவரில் தொங்கியபடி புல்லப்ஸ் செய்த போது கை இடையறியதில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

நெஞ்சை பதற வைத்த அதன் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவரது சாகசத்தினை வேடிக்கை பார்த்த ரசிகர்கள், பொதுமக்கள் பதறி துடித்தனர்.

மூலக்கதை