பிரிட்டன் அரண்மனைக்குள் நுழைய முயன்றவன் கைது

தினமலர்  தினமலர்

லண்டன்: பிரிட்டன் ராணி வசிக்கும், பக்கிங்ஹாம் அரண்மனையின் சுற்றுச்சுவரின் மீது ஏறி, உள்ளே நுழைய முயன்ற இளைஞனை, போலீசார் கைது செய்தனர்.
பிரிட்டனின், பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவரும், இளவரசருமான, பிலிப் ஆகியோர் வசிக்கின்றனர்.
கடந்த, 1982ல், மைக்கேல் பாகன் என்ற நபர், அரண்மனையின் சுற்றுச்சுவர் வழியாக, உள்ளே குதித்து, ராணியின் படுக்கையறை வரை வந்த பின், அரண்மனையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு, ஐந்து முறை அரண்மனைக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் வந்ததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில், அரண்மனையின் சுற்றுச்சுவரில் ஏற முயன்றவனை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவன், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என, தெரிய வந்ததால், நிபந்தனை ஜாமினில் அவன் விடுவிக்கப்பட்டான்.

மூலக்கதை