சீனாவில் சாகசம் செய்யும் போது 62 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

தினகரன்  தினகரன்

பீஜிங்: சீனாவைச் சேர்ந்த வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் கை நழுவி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவைச் சேர்ந்த வுயாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். 62 மாடி கட்டிடத்தின் மேல் சாகசம் செய்வதற்காக அந்த வாலிபர் தயார் நிலையில் இருந்தார். இதைக் காண வந்து பொதுமக்கள் மற்றும் பலர் அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்தவாறு புல்-அப் சாகசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது சில நொடிகளில் கை நழுவி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாகசம் செய்ய முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கீழே விழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரின் சாகசங்களை கண்டு சீன மக்கள் சூப்பர்மேன் என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை