சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி

தினமலர்  தினமலர்

ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
சமீபத்தில், தேசிய தினத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த, சினிமா ஒளிபரப்புக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை