உலக வெப்ப உயர்வு! ஆபத்தை உணர்த்திய பனிக் கரடி

PARIS TAMIL  PARIS TAMIL
உலக வெப்ப உயர்வு! ஆபத்தை உணர்த்திய பனிக் கரடி

மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்ட பனிக் கரடி ஒன்றின் காணொளி மக்களின் கவனத்தைச் சுற்றுசூழல் பாதுகாப்பின் பக்கம் திருப்பியுள்ளது.
 
இயற்கைக் காட்சிகளை நிழற்படம் எடுக்கும் பால் நிக்லனால் (Paul Nicklen) காணொளி எடுக்கப்பட்டது.
 
Sea Legacy எனும் அமைப்பிற்காகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிக்லன் அந்தக் காணொளியைப் பதிவுசெய்தார்.
 
அதிலிருக்கும் பனிக் கரடி மெலிந்த உடலுடன் இறக்கப்போகும் நிலையில் காட்சியளிக்கின்றது.
 
கனடாவைச் சார்ந்த தீவு ஒன்றில் கரடி குப்பைகளுக்கியே உணவு தேடி அலைகின்றது.
 
காணொளி 3.5 மில்லியன் தடவைக்கும் மேல் மக்களால் பார்க்கப்பட்டது.
 
கரடியின் அவல நிலை தம்மை உருக்கிவிட்டதாக நிக்லன் கூறினார்.
 
வெப்பநிலை உயர்வு காரணமாக, பனிக் கரடிகளின் வசிப்பிடங்கள் குறைந்து வருகின்றன.
 
மேலும் அவற்றுக்கான உணவு கிடைக்கும் இடங்களும் குறைந்து வருவதால் பனிக் கரடிகள் பட்டினியால் மடியும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 
 
 

மூலக்கதை