சிங்கப்பூர் சுகாதாரத்துறையில் ஹேக்கர்ஸ் கைவரிசை : 15 லட்சம் பேரின் சிகிச்சை ஆவணம் திருட்டு

தினகரன்  தினகரன்
சிங்கப்பூர் சுகாதாரத்துறையில் ஹேக்கர்ஸ் கைவரிசை : 15 லட்சம் பேரின் சிகிச்சை ஆவணம் திருட்டு

சிங்கப்பூர்:  சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் லூங் உட்பட 15 லட்்சம் பேரின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.சிங்கப்பூர் மிகவும் அதிநவீன நாடு. தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. இதன் சுகாதாரத்துறையும் கணினி மயமாக்கப்பட்டு, நோயாளிகளின் உடல்நிலை பற்றிய ஆவணங்கள் சேமிக்கப்படுகின்றன. இவர்களின் உடல்நிலை, சிகிச்சை பற்றிய தகவல்கள், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஒரு சில நிமிடங்களில் கம்ப்யூட்டர் மூலம் பரிமாறிக் கொள்ள முடியும்.இந்நிலையில், இந்நாட்டு பிரதமர் லீ ஹெசின் லூங் உட்பட 15 லட்்சம் பேரின் உடல்நிலை, சிகிச்சை பற்றி ஆவணங்களை கம்யூட்டர் ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகவல்களை தனிப்பட்ட நபர்களோ, நிறுவனங்களோ செய்தது போல் தெரியவில்லை. ஏதோ ஒரு நாடுதான் இந்த தகவல்களை திருடி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த தகவல் திருட்டுக்கு மிகவும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ரஷ்யா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி சிங்கப்பூர் சைபர்கிரைம் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட தகவல்களில் சிங்கப்பூரின் முக்கிய விஐபி.க்கள் பலரின் தகவல்களும் உள்ளன. குறிப்பாக, பிரதமர் லூங்கின் ஆவணங்களை குறி வைத்து இந்த திருட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், இவர்கள் தனிப்பட்ட முறையில் மிரட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூலக்கதை