ரஷ்யா புதிய ஏவுகணை சோதனை

தினமலர்  தினமலர்
ரஷ்யா புதிய ஏவுகணை சோதனை

மாஸ்கோ : கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையைப் பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி அளித்துள்ளது. அடுத்தவாரம் கொண்டாடப்பட இருக்கும் அந்நாட்டின் கடற்படை தினத்தின் முன்னோட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்லாந்து கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் உஸ்தினோவ் என்ற போர்க்கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. ஹைப்பர்சானிக் ரகத்தைச் சேர்ந்த இந்த ஏவுகணை அடுத்த சில நொடிகளில் இலக்கை குறிதவறாமல் தாக்கி அழித்தது.

இதேபோல் நிலத்திலிருந்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை கடலுக்குள் இருந்த இலக்கைத் தாக்கி அழித்தது. நீர், வானம், நிலம் என எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை ஏவ முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

மூலக்கதை