அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் கைது : டிரம்பின் உத்தரவுக்கு பயந்து மெக்சிகோவினர் நாடு திரும்பினர்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் கைது : டிரம்பின் உத்தரவுக்கு பயந்து மெக்சிகோவினர் நாடு திரும்பினர்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் உரிய ஆவணங்களின்றி யாரும் நுழைய கூடாது என்று அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவால் மெக்சிகோ மக்கள் பலர் கண்ணீருடன் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர். மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். கைது நடவடிக்கையின் உச்சமாக அவர்களின் குழந்தைகளை பிரித்து வேறு இடத்தில் அடைத்து வைத்த நிகழ்வு கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. இதனால் குழந்தைகளை தனிமைபடுத்தும் உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவில் குடியேற சென்ற மெக்சிகோ நாட்டினர் கண்ணீருடன் சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த அவரின் மனைவி மெலனியா அதை தெரிவிக்கும் விதமாக தனது மேலாடையில் எனக்கு கவலையில்லை என்ற அர்த்தத்தில் I dont care என்று எழுதியிருந்தார். இதையடுத்தே டிரம்பின் மனம் மாறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை