இசையால வசமாகா இதயம் எது!

தினமலர்  தினமலர்
இசையால வசமாகா இதயம் எது!

வாழ்க்கையில் இன்பம், துன்பம் என அனைத்துக்கும் மருந்தாக இசை திகழ்கிறது. இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை.
இசை, வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்கிறது. தாலாட்டு பாடலைக் கேட்கும் குழந்தை, அழுவதை நிறுத்தி விட்டு உறங்குகிறது. ஏனெனில்இசைக்கும் மட்டுமே அனைவரையும் மயக்கும் ஆற்றல் உள்ளது. இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும், 1982முதல் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

தோன்றிய விதம்



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.

பலவிதம்

பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும், கலாசாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இந்துஸ்தானி, கர்நாடக இசை என இரண்டு இசைகள் தான் பின்பற்றப்படுகின்றன.

கட்டுப்பாடு

ராகம், தாளம், சுருதி, குரல்வளம், இவை நான்கும் சரிவர அமையாமல் இசைக்கப்படும் பாடலை எவருமே ரசிக்க முடியாது. இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும்.

மூலக்கதை