அமெரிக்காவில் அகதி சிறுவர்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிப்பு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன் : அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர் மற்றும் காப்பாளர்களிடமிருந்து கடந்த 6 வாரங்களில் 1,995 சிறுவர்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 19 முதல், மே 31 வரை அமெரிக்கா-வில் அடைக்கலம் தேடி சட்டவிரோதமாக வந்த 1,940 பேர் எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்-பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் வந்த 1,995 சிறுவர்கள் பெற்றோர் மற்றும் காப்பாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, வேறு இடங்-களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த கடுமையான கொள்கை அறிவிப்புக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோரிடமிருந்து பிரிக்-கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிய கொள்கையின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் அகதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பெரியவர்களுடன் வரும் சிறுவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அவர்கள் பிரத்யேக காப்பகங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து சிறுவர்களைப் பிரிக்கும் அரசின் செயல், மனிதநேயத்துக்கு எதிரானது என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் பெரியவர்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் பிரித்து வைப்பது சரியே என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மூலக்கதை