மாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
மாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்

ஸாரடேஸ் : ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, கிரீசின் அண்டை நாடான, மாசிடோனியாவின் பெயரை, வடக்கு மாசிடோனியா குடியரசு என மாற்றம் செய்வதற்கான, வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே நேற்று கையெழுத்தானது.

ஐரோப்பிய நாடான, யுகோஸ்லாவியா, 1991ல், சிதறுண்டபோது, மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. இருப்பி-னும், மாசிடோனியா என்ற பெயரை பயன்படுத்த, அண்டை நாடான, கிரீஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கிரீஸ் நாட்டின் வடபகுதியும், மாசிடோனியா என அழைக்கப்படுவதால், அப்பகுதியை, புதிய நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என்ற அச்சமே அதற்கு காரணம். இதனால், ஐரோப்பிய யூனியன் மற்றும், 'நேட்டோ' அமைப்பில், மாசிடோனியா சேர்வதை, சிறப்பு அதிகாரம் மூலம், கிரீஸ் தடுத்து வந்தது.

இந்நிலையில், மாசிடோனியா அரசு, தங்கள் நாட்டின் பெயரை, 'வடக்கு மாசிடோனியா குடியரசு' என மாற்-றம் செய்ய, கிரீஸ், சம்மதித்தது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தம், மாசிடோனியா - கிரீஸ் இடையே, நேற்று கையெழுத்தானது. இதன்மூலம், கிரீஸ் - மாசிடோனியா இடையிலான, 27 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

மூலக்கதை