டிரம்பின் மாஜி மேலாளருக்கு சிறை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மனபோர்டின் ஜாமீனை திரும்பப் பெற்ற வாஷிங்க்டன் டி.சி நீதிமன்றம், அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். விசாரணையின் முன், பால் மனபோர்ட் முக்கிய சாட்சிகளை கலைக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிணை விதிமுறைகளை மீறி மொபைல் செயலிகளை பயன்படுத்தி பிற நபர்களை தொடர்பு கொண்டதாகவும் மனபோர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வரி மோசடி, பண மோசடி, சட்டவிரோதமாக அழுத்தங்கள் அளித்ததாகவும் அவர் மீது குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.மனபோர்ட், "அவர் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும்", நீதிமன்ற நடவடிக்கைகளை "ஏதோ சந்தைப்படுத்துதல் போல நினைத்துக் கொண்டிருப்பதாகவும்" அமெரிக்க மாவட்ட நீமிபதி ஏமி பெர்மன் கூறினார்.மனபோர்ட் இன்னும் விசாரிக்கப்படாத நிலையில், இது 'நியாயமற்றது' என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முல்லர் விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முடிவெடுப்பார் என்று அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார்.ஆனால், அதிபர் டிரம்ப் முல்லர் விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என முன்னாள் நியூயார்க்கின் மேயர் கூறியுள்ளார்.

மூலக்கதை