சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு தயாரிப்பாளர்களை காக்கவும், இறக்குமதி பொருட்கள் மீது வரி விதிப்பது, சர்வதேச வியாபார சந்தையின் வழக்கம்.சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு, ஆண்டு தோறும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனப்பொருட்கள், அமெரிக்கதொழில்நுட்பத்தை திருடி செய்யப்படுவதாகவும், இது சந்தை வியாபாரத்துக்கு எதிரான செயல்என்றும் அமெரிக்கா கூறி வந்தது.இதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு, 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில், அதே அளவிலான வரி விதித்துள்ளது. இது, இரு நாடுகளிடையே, வர்த்தகப் போர் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை