லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் : பிரிட்டன் தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் : பிரிட்டன் தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

லண்டன் : லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்  வேதாந்தாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தொழிலாளர் கட்சியின் எம்.பி. யும் நிழல் நிதியமைச்சர் என குறிப்பிடபடுபவருமான ஜான் மெக்டோனல் கூறியுள்ளார். வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் பல நாடுகளில் சட்டவிரோத சுரங்கங்களை வைத்திருப்பதாகவும், சுற்றுசூழலை மாசுப்படுத்துவதுடன் உள்ளுர் மக்களை வாழ்விடங்களில் இருந்து வலிக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஜான் மெக்டோனல் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா, ஜாம்பியா உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமைகளை மீறுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகள் குற்றம் சாட்டி இருப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளார். எனவே பங்குச்சந்தை ஒழுங்கு முறையாளர்கள் வேதாந்தா ரிசோர்சஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஜான் மெக்டோனல் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து லண்டன் பங்குச்சந்தை கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.

மூலக்கதை