ஆண் - பெண் மாணவர்களிடையே 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் : பாக்., பல்கலைகழகம் சுற்றறிக்கை

தினகரன்  தினகரன்
ஆண்  பெண் மாணவர்களிடையே 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் : பாக்., பல்கலைகழகம் சுற்றறிக்கை

இஸ்லாமாபாத்: ஆண் - பெண் மாணவர்கள் ஒன்றாக நிற்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ அவர்களிடையே 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என பாகிஸ்தானின் பஹ்ரியா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகம் அண்மையில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. கராச்சி மற்றும் லாகூரில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு அந்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் மாணவர்களின்டம் கண்ணியத்தை வளர்க்கும் பொருட்டே இந்த இடைவெளி அறிவிக்கப்படுள்ளதாக பஹ்ரியா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்காக கையில் அளவுகோல் வைத்துக்கொண்டே சுற்ற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மூலக்கதை