226 பேருக்கு உயிர் பயத்தை காட்டிய பயணிகள் விமானம்!

PARIS TAMIL  PARIS TAMIL
226 பேருக்கு உயிர் பயத்தை காட்டிய பயணிகள் விமானம்!

துருக்கி சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று 5 நிமிடத்தில் திடீரென்று 32,000 அடிக்கு கீழே இறங்கியதால், பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர்.
 
துருக்கி சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று Antalya-விலிருந்து Chelyabinsk-க்கு 226 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது.
 
அப்போது விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று 10,000 மீற்றர் உயரத்திலிருந்து 500 மீற்றர் உயரத்திற்கு கீழே இறங்கியுள்ளது.
 
அதாவது 5 நிமிடத்தில் 32,800 அடி கீழே இறங்கியதால், விமானத்தில் காற்று அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பீதியில் உறைந்த பயணிகள் அலறியுள்ளனர்.
 
அதன் பின் விமானத்தில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கினை பயணிகள் உடனடியாக பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் ஆக்ஸிஜன் மாஸ்கினை பயன்படுத்தியுள்ளனர்.
 
 
 

மூலக்கதை