அரச திருமணத்தில் வழக்கத்திற்கு மாறான கேக்!

PARIS TAMIL  PARIS TAMIL
அரச திருமணத்தில் வழக்கத்திற்கு மாறான கேக்!

நாளை நடைபெறவுள்ள இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணக் கொண்டாட்டத்தில் என்ன கேக் பரிமாறப்படும்?
 
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் திருமணக் கொண்டாட்டங்களில் பழ கேக் பரிமாறப்படுவது பாரம்பரியம்.
 
ஆனால், இம்முறை வித்தியாசமான கேக் ஒன்றை விருந்தினர்கள் திருமணக் கொண்டாட்டத்தில் சுவைக்கவிருக்கின்றனர்.
 
எலுமிச்சம்பழத்துடன் எல்டர்பெர்ரி (elderberry) பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கேக் திருமணத்தில் பரிமாறப்படும்.
 
இளவரசர் ஹேரி, மேகன் இருவரும் தற்போதைய பருவத்தில் பிரபலமாக இருக்கும் சுவைகளைத் தேர்ந்தெடுத்து வழக்கத்திற்கு மாறான இந்தக் கேக்கை பரிமாறவுள்ளனர்.
 

மூலக்கதை