மனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ்(92) சமீபத்தில் மரணம் அடைந்தார்.

இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71). இவர் அமெரிக்காவின் 43வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் கடந்த செவ்வாய்கிழமை மரணம் அடைந் தார். அவரது இறுதி சடங்கு சமீபத்தில் நடந்தது.

அதில் ஹெர்பர்ட் வாக்கர், ஜார்ஜ் புஷ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பார்பரா இறுதி சடங்கு நடந்த ஒரு நாள் கழித்து ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் கிருமி தொற்று ஏற்பட்டு ரத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பரிசோதனையில் கண்டறியப் பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் ஹெர்பர்ட் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சைக்கு பலன் கிடைத்திருப்பதால் ஹெர்பர்ட் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை