ஜெர்மனி பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு

தினமலர்  தினமலர்
ஜெர்மனி பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு

பெர்லின்: ஜெர்மன் பிரதமர், ஏஞ்சலா மெர்க்கலை, பிரதமர் மோடி, சந்தித்து பேசினார்.சுவீடன் மற்றும் பிரிட்டன் பயணத்துக்கு பின், நேற்று முன்தினம், ஜெர்மன் நாட்டு தலைநகர், பெர்லினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றார். ஜெர்மன் பிரதமர், ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் உயர் அதிகாரிகள், மோடியை வரவேற்றனர்.ஏஞ்சலாவுடன் நடந்த சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. 'இந்தியா -- ஜெர்மனி நாடுகளிடையே, பல்வேறு ஒத்துழைப்புகள் குறித்து பேசினோம். உலக அளவிலான விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.நேற்று காலை, பிரதமர் மோடி, விமானம் மூலம் டில்லி திரும்பினார்.

மூலக்கதை