தென்சீனக்கடலில் மீண்டும் மோதல் சூழல்

தினமலர்  தினமலர்

சிட்னி: ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை சீனா வழிமறித்ததையடுத்து தென்சீனக்கடலில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.தென்சீனக் கடல் தங்களுக்கே சொந்தம் என சீனா கூறி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தென்சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் தென்சீனக்கடலில் சென்ற 2 ஆஸ்திரேலிய போர் கப்பல்கள், ஒரு எண்ணெய் கப்பலை சீன கடற்படை வழிமறித்தது.ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறும்போது, 'தென்சீனக் கடலின் சர்வதேச எல்லை பகுதியில் பயணம் செய்ய எங்களுக்கு முழுஉரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. மூன்று கப்பல்களும் பத்திரமாக வியட்நாம் சென்றுள்ளன. தென்சீனக் கடலின் சர்வதேச எல்லையில் நாங்கள் தொடர்ந்து ரோந்து செல்வோம். எத்தகைய அச்சுறுத்தல்களும் அஞ்ச மாட்டோம்” என்றார்.

ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களை சீனா வழிமறித்ததையடுத்து தென்சீனக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அந்த கடல் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

மூலக்கதை