ஜப்பானில் 250 ஆண்டுக்கு பின் வெடித்து சிதறிய எரிமலை

தினமலர்  தினமலர்

டோக்கியோ: ஜப்பானில் 250 ஆண்டுகளுக்கு பின்னர் மவுண்ட் லோ எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.ஜப்பானின் க்யூஷு தீவுப் பகுதியில், மவுண்ட் கிரிஷ்மா உள்ளது. இதன் ஒரு பகுதியான மவுண்ட் லோவில்ஏப்.19 முதல் எரிமலையிலிருந்து சாம்பல் நிற புகைகள் வெளிவர துவங்கியுள்ளது, இதனால் அப்பகுதி பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்துள்ளது.மவுண்ட் லோ இதற்கு முன்னர் 1768 ஆம் ஆண்டு எரிமலை வெடித்துள்ளது. 250 ஆண்டுகளுக்க பிறகு மீண்டும் வெடிக்க துவங்கியுள்ளது.ஜப்பானில் செயல்படும் நிலையில் மொத்தம் 103 எரிமலைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள மவுண்ட் ஆன் டேக் வெடித்தது. இதில் 57 பேர் பலியாகினர். கடந்த 90 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றம் இந்த எரிமலை வெடிப்பு கருதப்பட்டது.

மூலக்கதை