கல்வி கற்க வயது தடையில்லை என்று நிரூபித்த மூதாட்டி!

PARIS TAMIL  PARIS TAMIL
கல்வி கற்க வயது தடையில்லை என்று நிரூபித்த மூதாட்டி!

பள்ளிக்குச் செல்லாமல் வறுமையில் வாடிய தம் குடும்பத்தின் பண்ணையில் சிறு வயதில் உதவிய குவாடலூபே பாலாசியோஸின் கனவு இந்த வாரம் நனவானது.

 
இப்போது அவருக்கு வயது 96.
 
தனது 100வது பிறந்தநாளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியில் பயிலவேண்டும் என்ற அவருடைய நீண்டகால ஆசை நிறைவேறியது.
 
மெக்சிகோவைச் சேர்ந்த இந்த மூதாட்டிக்கு திங்கட்கிழமை பள்ளியின் முதல் நாள்.
 
அன்று வேதியியல், கணித வகுப்புகளில் பாடக் குறிப்புகளை எடுத்த அவர், நடன வகுப்பிலும் எல்லோரும் ரசிக்கும் வண்ணம் நடனமாடி மகிழ்ந்தார்.
 
பெரியவரானதும் சந்தையில் கோழிகளை விற்ற அவர், போகப் போக சொந்தமாகவே கணக்கைக் கற்றுக்கொண்டார்.
 
ஆனால், எழுத, படிக்கக் கற்றுக்கொள்ளவில்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது.
 
இதனால், பள்ளியில் சேர்ந்து பயில முடிவெடுத்ததாக அவர் பகிர்ந்துகொண்டார். 
 

மூலக்கதை