செல்வாக்குமிக்க 4 இந்தியர் 'டைம்' பத்திரிகை பாராட்டு

தினமலர்  தினமலர்
செல்வாக்குமிக்க 4 இந்தியர் டைம் பத்திரிகை பாராட்டு

நியூயார்க், அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உட்பட நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் பத்திரிகை ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் உலக அளவில் ஆய்வு நடத்துகிறது. இதன்படி உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை டைம் பத்திரிகை நேற்று வெளியிட்டது.அதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை