அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92).

இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பார்பரா புஷ் இன்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்து, முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்- பார்பரா தம்பதியினரின் மகன் ஜார்ஜ் டபள்யூ புஷ் (71) என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பராவின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை