குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர்!

PARIS TAMIL  PARIS TAMIL
குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர்!

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாறியதன் மூலம் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார் என இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டது.

 
சுமார் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் அரசியல் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து பேஸ்புக்கிற்கு எதிராக கருத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்த சர்ச்சை குறித்து மௌனம் கலைத்துள்ளார். தவறு நடந்தது உண்மைதான், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், வருங்காலங்களில் இது போன்ற தகவல் திருட்டுகளை சகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட 'ஆப்'களை பேஸ்புக் தணிக்கை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை