தினேஷ் கார்த்திக் அசத்தல்: தொடரை வென்றது இந்தியா

தினமலர்  தினமலர்
தினேஷ் கார்த்திக் அசத்தல்: தொடரை வென்றது இந்தியா

கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு 'டுவென்டி-20' பைனலில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முன்னதாக,வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு 'டுவென்டி-20' பைனலில் இந்திய அணிக்கு 167 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முத்தரப்பு 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டார்.

சகால் அசத்தல்
வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (11) ஏமாற்றினார். சகால் 'சுழலில்' தமிம் இக்பால் (15), சவுமியா சர்கார் (1) சிக்கினர். முஷ்பிகுர் ரஹிம் 9 ரன்களில் திரும்பினார். மகமதுல்லா (21) ரன்-அவுட்டானார். அபாரமாக விளையாடிய சபிர் ரஹ்மான் அரை சதம் விளாசினார். உனத்கட் 'வேகத்தில்' சபிர் (77), ரூபெல் (0) ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மெஹிதி அதிரடி காட்டினார்.
முடிவில், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மெஹிதி (19), முஷ்டபிஜுர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித் அரை சதம்


இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா அரை சதம் அடித்து 58 ரன்னில் அவுட் ஆனார். தவான 10 ரன்னில் அவுட் ஆனார். ரெய்னா டக் அவுட் ஆனார். பின்னர் வந்த ராகுல் 24 ரன் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில்6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

மூலக்கதை