இங்கிலாந்து பாட்மிடன் :அரையிறுதியில் சிந்து தோல்வி

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து பாட்மிடன் :அரையிறுதியில் சிந்து தோல்வி

பிர்மிங்ஹாம் : ஆல் இங்கிலாந்து பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் ஆல் இங்கிலாந்து பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்தியாவின் பி.வி. சிந்து, அரையிறுதிப்போட்டியில், உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

இருவரும் சமபலத்துடன் மோதியதால், போட்டி ரசிகர்களுக்கு பெரும்விருந்தாக அமைந்தது. 1 மணிநேரம் 19 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 21-19, 19-21,18-21 என்ற செட் கணக்கில் சிந்து அதிர்ச்சி தோல்வியுற்றார்.

ஒன்பதாவது வெற்றி : இந்த வெற்றியின் மூலம், 20 வயதே ஆன ஜப்பானின் அகேனே யமாகுச்சி, 9வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மிடன் தொடரிலும் அகேனே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை